29.5 C
Chennai
Sunday, May 19, 2024
201803310911575304 1 women beauty. L styvpf
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..

நாம் அனைவருமே அழகான, இளமையான தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே! இல்லை என மறுத்தாலும் நம் அடிமனதில் இந்த ஆசை கண்டிப்பாக ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்..! எனவே, அனைவரும் அழகாக இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்..!201803310911575304 1 women beauty. L styvpf

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்தப் பழங்களில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாகும்.

தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

Related posts

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த இதோ எளிய நிவாரணம்!

nathan

வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தேன்………. உண்மை ……..

nathan

சூப்பர் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… !

nathan

கொழுப்பை குறைக்கும் குடைமிளகாய்

nathan

செரிமானத்தை எளிதாக்கும் 8 உணவுகள்..!

nathan

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்..?

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

உங்களுக்கு தெரியுமா பலவிதமான‌ உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ‘தேன்’ நெல்லிக்காய்!

nathan