Shark Puttu 11 jpg 846
அசைவ வகைகள்

சுறா மீன் புட்டு

மீன் குழம்பு, வறுவல், பொரியல்னு செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு. ‘குழந்தைகளுக்கு சத்தான மீன் கொடுக்கணும்னு ஆசை ஆனா முள் இருக்கிறதால சாப்பிட பயப்படுறாங்க. என்ன செய்றதுனு’ புலம்பும் தாய்மார்களுக்கு இதோ ஈஸியான சுறா புட்டு, முள்ளுங்கிற பேச்சுக்கே இடமில்ல… உங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.. செய்து கொடுத்து அசத்துங்க…..

தேவையான பொருட்கள்:

சுறா மீன் துண்டு – 300 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 3 அல்லது 4
பூண்டு (பொடியாக நறுக்கியது) – 6 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
மல்லித் தழை – சிறிது
முழு உளுந்து – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.

* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.

* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

* கடாயை சூடாக்கவும்.

* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.
Shark Puttu 11 jpg 846

Related posts

சிக்கன் லெக் ப்ரை

nathan

வெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan

மசாலா மீன் ப்ரை

nathan

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

nathan

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

வான்கோழி வறுவல் -வீடுகளில் செய்து சுவைக்கலாம்.

nathan