31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… உடல் ஆரோக்கியத்தை காக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் இதோ!

உடல் ஆரோக்கியத்திற்கு காக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் சிலவற்றை தற்போது இங்கு பார்ப்போம்.

துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

பூசனிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட நித்தியகல்யாணி!!

nathan

உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க முட்டைகளை எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் உடையில்லாமல் உறங்குவது உடலுக்கு நன்மையா?..!!

nathan

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

nathan

அதிகமாக வேலை செய்ய முடியாது என்று எப்படி சொல்லலாம்?தெரிஞ்சிக்கங்க…

nathan

அதிகரித்துவரும் இந்த உடல்பருமன் சாதாரண விஷயம் கிடையாது. இந்த சமூகம் இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில்

nathan

பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல்

nathan