1564124693
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்….!

1. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள். காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

2. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

3. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

4. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

5. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

6. இரவில் உறங்குவதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

7. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

8. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

9. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

10. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

Related posts

பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

அரிசி உடம்புக்கு நல்லதா?

nathan

வேப்பிலையின் தீமைகள்

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

எது காயகல்பம்? நலம் நல்லது

nathan

30 வயதை தாண்டிய திருமணமாகாத ஆண்களைப் பற்றி நினைக்கும் 10 விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருகிறதா? வேகமாக செயல்படும் ஆயுர்வேத வைத்தியம்

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan