25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
rump Doing Very Well In Hospital But Next 48 Ho
Other News

மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்! அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய நிலை என்ன?

ஒட்டுமொத்த உலகையும் பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா, வல்லரசு நாடான அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகுக்கே பெரியண்ணன் தோரணையை பறைசாற்றும் அந்த நாடு, சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என கொரோனா பாதிப்பிலும் முதலிடத்திலேயே நீடிக்கிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதனால், தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.

இதற்கு மத்தியில் டிரம்பின் ஆலோசகர் ஹோம் ஹிக்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட டிரம்ப், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிரம்பின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்கள் கூறியதாவது:- டிரம்ப் இயல்பாக நடமாடி வருகிறார். கடந்த 24 மணி நேரமாக அவருக்கு காய்ச்சல் இல்லை. இருமலும் குறைந்துள்ளது. டிரம்பின் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஸ்ரீலங்காவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி விடுமுறை கொண்டாட்டம்

nathan

கவர்ச்சியாக வந்த கீர்த்தி சுரேஷ்..

nathan

விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

nathan

அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்

nathan

12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசிபலன்

nathan

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா..

nathan

கீர்த்தி உடன் தல பொங்கலை கொண்டாடிய அசோக் செல்வன்

nathan

கள்ளக்காதலை கண்டித்த அக்காவை கொலை செய்துவிட்டு இறுதி சடங்கில் குத்தாட்டம்

nathan

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் நஞ்சு ! 141 குழந்தைகள் மரணம்..

nathan