17 1439801647 9reasonswhyyoushouldcryyoureyesout
ஆரோக்கியம் குறிப்புகள்

அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.

மகிழ்ச்சியில் சிரிக்காமல் இருப்பதை விட, துன்பத்தில் அழாமல் இருப்பது தான் பெரும் நோய். நீங்களே கூட சிலரை உங்கள் நட்பு அல்லது உறவு வட்டாரத்தில் பார்த்திருக்கலாம். “அட, என்ன ஒரு கல் நெஞ்சுக்காரன் துளி கூட அழாம இருக்கான்..” என்று நீங்களே கூட யாரேனும் கூறி காதுபட கேட்டிருக்கலாம்.

ஆம், சிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்….

[b]கண்களை சுத்தம் செய்ய உதவுகிறத[/b]
17 1439801647 9reasonswhyyoushouldcryyoureyesout
ு கண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.

[b]பாக்டீரியாக்களை கொல்கிறது[/b]

கண்ணீர் லைசோசைமை (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 – 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.

[b]நச்சுகளை அகற்றுகிறது [/b]

அழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெருமபாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.

[b]மன நிலையை மேலோங்க வைக்க உதவும்[/b]

உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.

[b]மாங்கனீஸ் சத்தை குறைக்கிறது[/b]

மாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பு (அல்லது) தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அழும் போது மாங்கனீஸ் குறைவதால், உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.

[b]இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது[/b]

இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.

[b]மன அழுத்தம் குறையும்[/b]

அடுத்த முறை நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருக்கும் போது அழ முயற்சிக்கலாம். ஏனெனில் இது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது. ஆனால், அழுகை வரும் போது அடக்க வேண்டும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

[b]நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் [/b]

இது சற்று விசித்திரமாக தான் இருக்கிறது. ஏனெனில், அழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். ஆம், நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

[b]சருமத்தை பாதுகாக்கிறது [/b]

இது உங்களை வியக்க வைக்கும், நமது கண்ணீரில் இருக்கும் திரவம், சருமத்தில் இருக்கும் நச்சுகளை போக்கி, சருமத்தை பாதுகாக்கிறது.

Related posts

மறக்க முடியாத வில்லி..அடேங்கப்பா! தேவி பிரியா நிஜத்துல சாந்தமானவங்களாம்!

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan

உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு மொட்டை எடுத்தால் முடி அடர்த்தியாக வளரும் என்பது மெய்யா? பொய்யா?

nathan

பானைத் தண்ணீர் டாப்… கேன் வாட்டர் உஷார்! – ஓர் ஆரோக்கிய அலசல்!!

nathan

உறவுகளை வலுப்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்

nathan

ஸ்ட்ராபெரி

nathan

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?

nathan