28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
mangoes
ஆரோக்கிய உணவு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்தியாவில் ஒன்றுமில்லாத காரணத்திற்காக மாம்பழத்தை பழங்களின் அரசன் என்று கூறவில்லை. மிகவும் சுவைமிக்க அடர்ந்த மஞ்சள் நிறத்திலான மாம்பழங்கள், பல உடல்நல பயன்களையும் கொண்டுள்ளது. இந்த கோடைக்காலத்தில் நீங்கள் விரும்பி உண்ணும் மாம்பழத்தில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதிலும் இதனை இந்திய ஆண்கள் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை இல்லையா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்கள் மாம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கனிமங்கள் நிறைந்துள்ளது

நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய கனிமங்கள் பலவும் மாம்பழத்தில் அடங்கியுள்ளது. ஜிங்க், பொட்டாசியம், காப்பர் மற்றும் செலினியம் இதில் அடக்கம். இவை அனைத்தும் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேலும் பல குறைபாடுகளிடம் இருந்து உங்களை காக்கும்.

மெட்டபாலிக் வீதத்திற்கு உதவும்

ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட சோம்பேறியாக இருந்தால் மாம்பழங்கள் உண்ணுங்கள். மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, மெட்டபாலிக் வீதத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் இடையைச் சுற்றி வளர்ந்துள்ள சதையை இது குறைக்கும்.

புற்றுநோய்க்கு எதிராக போராடும்

மாம்பழத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான உடல் நல பயன் – அது புற்றுநோய்க்கு எதிராக போராடும். காரணம் அதில் அதிகமாக அடங்கியுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள். புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து இரத்த புற்றுநோய் வரை, பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவும் மாம்பழங்கள். மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்.

அல்கலைன் அளவை பராமரிக்கும்

கோடைக்காலத்தில் உங்கள் உடல் உணவுகளை செரிக்க வைக்க சிரமப்படுவதால், அசிடிட்டி உண்டாகும் ஆபத்து ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாம்பழத்திலோ மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அடங்கியுள்ளதால், உடலில் உள்ள அல்கலைன் அளவை பராமரிக்க இது உதவும்.

செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்

மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ இருப்பதால், அது செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் வல்லமை வாய்ந்துள்ளது. இது ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் இதனை காதல் பழம் என்றும் அழைக்கின்றனர்.

Related posts

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

nathan

சத்தான சுவையான கார்லிக் பிரட்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

nathan

சூப்பரான வெண் பொங்கல்

nathan

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!! கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

சுவையான கேரட் பச்சை பட்டாணி சாலட்

nathan

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க…. அற்புதமான எளிய தீர்வு

nathan