கோடைக்காலம் ஆரம்பித்தாலே, அய்யோ வந்துவிட்டமே என்ற எண்ணம் இருந்தாலும், அக்காலத்தில் வரும் சுவையான பழங்களை நினைத்தால், மனதில் ஒருவித சந்தோஷம் எழும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? கோடைக்காலத்தில் வரும் சீசன் பழங்கள், மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இதுப்போன்று வேறு: உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்!!!
உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை வாங்கி அதிகம் சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறைவதுடன், உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும்.
இப்போது உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால பழங்களைப் பார்ப்போமா!!!
தர்பூசணி
கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. இத்தகைய தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், இது வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்வோர், இதனை ட்ப்பாவில் போட்டு, ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.
பப்பாளி
பப்பாளியில் கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதனை டயட்டில் சேர்த்து வர, எடை குறைவதுடன், வயிற்று பிரச்சனைகளான வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவை வராமல் இருக்கும்.
லிச்சி
லிச்சியில் கூட கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. இவை மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவியாகவும் இருக்கும்.
ப்ளம்ஸ்
ப்ளம்ஸில் உள்ள சிட்ரிக் ஆசிட், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்துவிடும். மேலும் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பீச்
கலோரி மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள பீச் பழமும் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுத்துவிடும். ஆகவே டயட்டில் மறக்காமல் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொய்யாப்பழம்
பெரும்பாலானோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமும் கோடையில் விலை குறைவில் கிடைக்கக்கூடியது. இதுவும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
மாம்பழம்
பழங்களின் அரசனான மாம்பழத்தின் சுவையை பிடிக்காதோர் யாரும் இருக்கமாட்டார்கள். இத்தகைய மாம்பழம் சுவையை மட்டும் தன்னுள் அதிகம் வைத்திருக்கவில்லை, ஆரோக்கிய நன்மைகளையும் தான் வைத்திருக்கிறது. பலர் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் உடல் பருமனடைந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் மாம்பழத்தை எவ்வளவு சாப்பிட்டாலும், அது உடல் எடையைத் தான் குறைக்கும். ஆகவே கோடையில் மாம்பழத்தை சாப்பிட்டு உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.