30.8 C
Chennai
Monday, May 20, 2024
2019
மருத்துவ குறிப்பு

சிறுநீரக கல்லை கரைக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.

குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.

அறிகுறிகள்:

இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.

சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள்:

• கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

• வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

• அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

• ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

• அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.

• அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள் பூசணி, வெண் பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.

தவிர்க்க வேண்டியவை:

இந்த மருந்துகளை எடுத்து கொள்ளும் போது இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈஸ்ட் வளர்ச்சி அபரீதமாக இருப்பதற்கான 10 அறிகுறிகளும்… அதனை சமாளிப்பதற்கான வழிகளும்…

nathan

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி

nathan

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பித்தவுடன் ஏற்படும் உடனடி பலன்கள்

nathan

பாதிப்புக்கள் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

nathan

சர்க்கரை நோயில் இருந்து கால்களை பாதுகாப்போம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan