31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களே சிறுநீர் கசிவினால் கவலையா? அதிலிருந்து எப்படி விடுபடலாம்?

பொதுவாக நம்மில் சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும்.

இதை மருத்துவ ரீதியாக “ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ்” என்று கூறுவர்.

இதுபோன்ற பிரச்சினையை சந்திக்கும் பெண்கள் தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.

அதிலும் சிலர் வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள்.

வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகமாக இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றார்கள். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

யாருக்கு எல்லாம் வரலாம்?

நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும்.

அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம்.

உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?
  • நிறைய தண்ணீர் குடித்து வாருங்கள்.
  • இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும்.
  • சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும்.
  • தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.
  • குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும்.
  • அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.

Related posts

எண்ணிலடங்கா நோய்களை போக்கும் துளசி

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan

குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்

nathan

போலியோ சொட்டுமருந்து கட்டாயம் அளிப்போம்!

nathan

நமக்கு தெரியாமல் நம் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா ‘கக்கா’ வெச்சே புற்றுநோய் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம் .

nathan

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

இன்றைய இளம் தலைமுறையினருக்கு தற்கொலை எண்ணம் வரக்காரணம்

nathan