கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற அல்லது நிறைவேறிய வேண்டுதல்களுக்காக பக்தர்கள் தேங்காய் உடைப்பது வழக்கம்.
அவ்வாறு பக்தர்கள் தேங்காய் உடைக்கும் போதோ அல்லது பகதர்கள் கொடுக்கும் தேங்காயை கோவில் பூசாரிகள் உடைக்கும் போதோ கவனமாக உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
ஏனென்றால் தேங்காய் உடைப்பதை வைத்து அதன் பின்னர் நம் வாழ்வில் நடக்க கூடிய இன்ப துன்பங்களை இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்பதாலே கவனமாக உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதாவது தேங்காய் உடைத்த பிறகு அதன் வடிவம் மற்றும் உடைந்த அளவு உள்ளிட்டவைகளை வைத்து இதை கண்டறியலாம்.
பலன்கள்
கோவிலில் உடைத்த தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் வீட்டில் செல்வம் கூடும்
தேங்காய் உடைத்த பின்னர் அது ஐந்தில் ஒரு பங்காக பிரிந்தால் வீட்டில் அழியாத செல்வம் சேரும்
உடைத்த தேங்காய் சரிசமமாக பிரிந்தால் வீட்டிலுள்ள துன்பம் தீரும், மேலும் செல்வம் பெருகும்
உடைபட்ட தேங்காய் மூன்றில் ஒரு பங்காக பிரிந்தால் இரத்தினம் சேரும்
தேங்காய் உடைக்கும் போது ஓடு தனியாக கழன்றால் வீட்டில் துன்பம் வந்து சேரும்
தேங்காய் உடைக்கும் போது அது அவர்களுடைய கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் அவர்களது குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்
உடைக்கும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் வீட்டில் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்
தேங்காய் முடிப்பாகமானது இரு கூறானால் வீட்டிலுள்ள பொருள் சேதமடையும்
தேங்காய் உடைக்கும் போது அதன் முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு பிரிவுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து விழுந்தால் அவர்கள் வீட்டில் நோய்களினால் துன்பம் ஏற்படும்
உடைக்கும் தேங்காய் சிறு, சிறு துண்டுகளாக உடைந்து பிரிந்தால் வீட்டில் மென்மேலும் செல்வம், செல்வாக்கு மற்றும் ஆபரண லாபம் உண்டாகும்
கோவில்களில் கடவுளை வணங்கி கொண்டிருக்கும் போது தேங்காய் உடைக்கும் சத்தமானது கேட்டால் அவர்களுக்கு வேண்டும் காரியம் வெற்றியை தரும்.