weightg
ஆரோக்கியம் குறிப்புகள்

ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? அப்ப தினமும் செய்யுங்க…

எங்க பார்த்தாலும் எடையைக் குறைக்கும் செய்திகளாக உள்ளதா? நீங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா? அதற்கான வழிகளை அன்றாடம் தேடுபவரா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. உடல் எடையைக் குறைக்கும் வழிகளை ஒருபுற மக்கள் தேடும் அதே வேளையில் எடையை அதிகரிக்கும் வழிகளைத் தேடும் மக்களும் உள்ளனர். ஆம், எப்படி ஒல்லியாவது கடினமான ஒரு விஷயமோ, அதேப் போல் தான் குண்டாவதும் அவ்வளவு எளிதானது அல்ல.

உலகில் பல மக்கள் மிகவும் ஒல்லியாக ஓமக்குச்சி போன்று காணப்படுவதுண்டு. அத்தகையவர்களைக் கண்டால் வயதிற்கு ஏற்ற உடலமைப்பைக் கொண்டிருக்கமாட்டார்கள். இந்நிலையில் அவர்கள் பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. இதனால் ஒல்லியாக இருக்கும் பலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இப்படி ஒருவரது உடல் எடை அதிகரித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், எப்போதும் ஆரோக்கியமான வழியைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானதும் நல்லதும் கூட.

அதற்கு தமிழ் போல்ட்ஸ்கை உடல் எடையை அதிகரிக்க உதவும் ஒருசில ஆரோக்கியமான பழக்கங்களை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் ஆரோக்கியமான வழியில் எடையை அதிகரித்துக் காட்டலாம்.

வழி #1

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பளுத்தூக்கும் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4-5 செட் செய்ய வேண்டும். இந்த பளுத்தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்து, ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

வழி #2

எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிட வேண்டும். தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

வழி #3

அன்றாடம் உண்ணும் உணவுகளில் கலோரிகள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.4 juice 1

வழி #4

ஜூஸ் குடிப்பதாக இருந்தால், ஒரே ஒரு பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸிற்கு பதிலாக பல பழங்களால் ஆன ஜூஸைத் தேர்ந்தெடுத்துக் குடிப்பது நல்லது. ஆப்பிள், பீச், பெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் ஒன்றாக உட்கொள்ள ஏற்றது. ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடியுங்கள். ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

வழி #5

டெசர்ட்டுகளை உண்பது ஆரோக்கியமானது மற்றும் இது உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்கவும் உதவும். யோகர்ட்டில் க்ரனோலா மற்றும் பழங்கள் சேர்த்து உண்பது, தவிடு மஃப்பின்கள் போன்றவை மிகவும் சிறப்பான டெசர்ட்டுகளாகும். உடல் எடையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு கலோரிகளை எடுப்பது அவசியமாகிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஆரோக்கியமான உணவுகளின் மூலம் கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.

வழி #6

பானங்களின் மூலம் கலோரி அளவை அதிகரிக்க நினைப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். சோடா, பீர், ஒயின் மற்றும் இதர சோம பானங்கள் உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானங்கள் இல்லை. இவற்றில் இருப்பது வெற்று கலோரிகள் ஆகும். அதாவது இவை ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் பானங்களான மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும். எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழ மில்க் ஷேக் குடியுங்கள்.

Related posts

தினம் ஒரு நாட்டு கோழி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

nathan

பெண்கள் தங்களின் காதலரை பற்றி நம்பும் பொய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

தெரியுமா உங்களுக்கு மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது?

nathan

குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌க இத செய்யுங்கள்!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை

nathan

நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க சில டிப்ஸ்….

nathan

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika