27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
ghjurty
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

healthy food, உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த சத்து மாவு ரெசிபி!!!!

குழந்தைகளுக்கு எந்த பொருளை பயன்படுத்தினாலும் எப்போதும் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அது உணவு பொருளாக இருந்தாலும் சரி, வெளிபுறம் உபயோகப்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி. குழந்தைகளின் வளர்ச்சிக்கு எட்டு மாதங்களுக்கு பிறகு பெரும்பாலானோர் சத்து மாவு கொடுப்பர்.

சத்து மாவை கடைகளில் வாங்கி கொடுப்பதனால் எந்த பலனும் கிடையாது. வீட்டிலே சத்து மாவை அரைத்து கொடுத்தால் தான் அதன் முழு பலன் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
ghjurty
தேவையான பொருட்கள்:

தோல் உளுந்து- 1/4 கப்

தோல் நீக்கிய உளுந்து- 1/4 கப்

தோலுடன் கூடிய பாசிப்பயறு- 1/4 கப்

தோல் நீக்கிய பாசிப்பருப்பு- 1/4 கப்

உடைத்த கோதுமை- 1/4 கப்

பொட்டுக்கடலை- 1/4 கப்

பார்லி- 2 தேக்கரண்டி

கொள்ளு- 2 தேக்கரண்டி

பாதாம் பருப்பு- 1/4 கப்

முந்திரி பருப்பு- 20

பிஸ்தா- 20

ஏலக்காய்- 4

பிரவுன் அரிசி- 1/2 கப்

செய்முறை:

சத்து மாவு செய்வதற்கு முதலில் அனைத்து பொருட்களையும் நன்றாக தண்ணீரில் அலசி காய வைத்து கொள்ள வேண்டும். இது காய ஒன்றில் இருந்து இரண்டு மணி நேரம் வரை ஆகும். அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து கொள்ளுங்கள்.

unnamed 4 6
காய வைத்து பருப்புகளை வறுத்து எடுத்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கொள்ளவும். எண்ணெய் எதுவும் ஊற்றாமல் அப்படியே தான் வறுக்க போகிறோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அளவில் இருப்பதால் அவற்றை தனித்தனியாக தான் வறுக்க வேண்டும். முதலில் 1/2 கப் பிரவுன் அரிசியை போட்டு வறுக்கவும்.

பிரவுன் அரிசிக்கு பதிலாக சாப்பாட்டு அரிசியும் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து ஒவ்வொரு பொருளாக போட்டு வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பருப்புகள் கருகி விடாமல் பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் சத்து மாவு கசக்கும்.
unnamed 5 6

பொட்டுக்கடலையை மற்றும் ஏலக்காய் தவிர்த்து அனைத்தையும் தண்ணீரில் அலசி காய வைத்து வறுத்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் வறுத்த பிறகு அதனை நன்றாக ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது சத்து மாவு வாசனையாக தயாராகி விட்டது.

இதனை குழந்தைகளுக்கு கொடுக்க முதலில் தண்ணீரை சூடு செய்து அதில் ஒரு கட்டி பனங்கற்கண்டை இடித்து போட்டு வடிகட்டி அந்த நீரை இரண்டு தேக்கரண்டி சத்து மாவோடு கலந்து அடுப்பில் வைக்கவும். ஓரளவு கெட்டியானதும் அதனை இறக்கி ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.

Related posts

சுவையான கேரட் பொரியல்

nathan

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

டம்பெல் தூக்குவது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். …..

sangika

பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய்

nathan

எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை

nathan

பசலைக்கீரை மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன…

nathan

உங்களுக்கு தெரியுமா அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தை எளிமையாக சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்?

nathan