large f
ஆரோக்கிய உணவு

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

கோடையில் இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீர்கள்…!
கோடைக்காலம் வந்து விட்டாலே உணவுப்பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மற்ற காலங்களை தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கி கொள்ளவே முடியாது.

குறிப்பாக வெயில் காலத்தில் சாதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே, அப்போது சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

❌ கார உணவுகளை கோடைக்காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும்.

அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, பட்டை போன்ற உணவிற்கு காரத்தை தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

❌ அசைவ உணவுகளை கோடைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்” உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது.

❌ சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

❌ வெயில் காலத்தில் கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

❌ அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

❌ ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதிகளவு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

❌ வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

❌ கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே, பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

❌ எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.

Related posts

சூப்பரான டிப்ஸ்! அடிக்கடி உணவுக்கு பயன்படுத்தும் மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

கார்ன் பாலக் கிரேவி

nathan

30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்

nathan

சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?

nathan

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

nathan

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

nathan

சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்!அப்ப இத படிங்க!

nathan

ஹெல்த்தி சைடுடீஷ்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan