29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
159023
மருத்துவ குறிப்பு

அடேங்கப்பா! அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

அல்லி கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.

அல்லி பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப் படபடப்பைத் தணிக்கும்.

அல்லி பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.

Related posts

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

nathan

சொரியாஸிஸ் வந்தால் எப்படி கண்டுபிடிப்பது? தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan

தாம்பத்தியம் சிறக்க உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக வேண்டும்

nathan

மீன் எண்ணெய்யின் மகத்துவம்

nathan

எச்சரிக்கை மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் – என்ன அறிகுறி உண்டாகும்?

nathan

அகத்திக்கீரை

nathan

மலச்சிக்கல், மாதவிடாய்க்கோளாறு நீக்கும், தாம்பத்ய உறவை பலப்படுத்தும் கற்றாழை!⁠⁠

nathan

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

nathan