இது மாதவிடாய் நாட்களில் பெண்களின் உடல் அதிக வெப்பத்தை வெளியேற்றுவதால் நிகழலாம் அல்லது 30 – 40 வயதைக் கடந்த, மாதவிடாய் நிற்பதற்கான இறுதிக் கட்டத்தை முன்கூட்டியே அடைவோருக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிகழும் அறிகுறியாக இருக்கலாம்.
அதாவது, பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரு ஹார்மோன்கள் சுரக்கும். மாதவிடாய் நாட்களில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரித்தும், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தும் சுரக்கும். இந்த மாற்றம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
அதைக் கட்டுப்பாட்டில் வைக்கவே உடல் அதிக வியர்வையை வெளியேற்றுகிறது. இந்த மாற்றம் வியர்வையை மட்டுமல்ல வெளியேறும் உதிரம் கூட சூடாக உணரலாம். சர்க்கரை நோயாளிகள் ‘சர்க்கரை அளவு டெஸ்ட்’ எப்போதெல்லாம் செய்ய வேண்டும்..? சுயமாக செய்வதால் என்ன ஆபத்து..?
40 வயதிற்கு முன்பாகவே மாதிவிடாயின் இறுதி கட்டத்தை அடைவது நவீன பெண்கள் சந்திக்கும் புதிய பிரச்னையாக உருவெடுக்கிறது. இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு உங்களுக்கும் முன்பே நிகழ்கிறது என்றாலும் அதன் அறிகுறியாக வியர்வை வெளியேறும்.
இந்த அறிகுறியோடு மாதவிடாய் அடிக்கடி வருதல், உதிரப்போக்கு அதிகரித்தல், மன அழுத்தம், உடலுறவின் போது அதிக வலி, நிலையற்ற சிந்தனை, கவனக்குறைவு, எரிச்சல், கோபம் அதிகரித்தல், வெஜினா வறட்சி இப்படி பல அறிகுறிகளை சந்திப்பீர்கள். இப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுதல் அவசியம். இதனால் இதய பிரச்னை, எலும்பு முறிவு போன்ற ஆபத்துகளை சந்திக்க நேரிடும்.
தீர்வு என்ன?
40 வயதிற்கு முன்பாகவே மாதிவிடாயின் இறுதி கட்டத்தை அடையும் ( premenstrual syndrome ) அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காண்பது அவசியம்.
உங்கள் வாழ்க்கை முறையில் இனியாவது கவனம் செலுத்துதல் அவசியம். முறையான தூக்கம், ஆரோக்கிய உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக வியர்வை வரும் சமயங்களில் படுக்கையறையை கூலாக வைத்துக்கொள்ளுங்கள். காற்று செல்லும்படியான லூஸான ஆடைகளை அணியுங்கள்.
இரவு காரமான உணவு, சூட்டை கிளப்பும் உணவுகளை தவிருங்கள். இது உடல் வெப்பத்தை அதிகரித்து வியர்வையையும் அதிகரிக்கும்.
அதிகமாக தண்ணீர் குடிப்பதாலும் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.