625.0.560.350.160.300.0
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா? இந்த பயிற்சி செய்து பாருங்கள்

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும்.

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

இதனை சிறுநீரக கற்களை எவ்வாறு நீக்குவது என்பதை பற்றிய முன்னோர்களின் ஆசன பயிற்சிகளை வைத்தே இதற்கு தீர்வு காண முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

புஜங்காசனம்

இந்த ஆசன முறையை செய்வதற்கு, முதலில் குப்புற படுக்க வேண்டும். அடுத்து உள்ளங்கைகளை தோல்களுக்கு நேராக வைத்து, முட்டியை உடன்போட சேர்த்து பிடித்து கொண்டு, தலையை லேசாக அழுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் மெல்ல கழுத்தை மேலே தூக்கி, மூச்சை மெல்லமாக இழுத்து கொள்ளவும்.

பிறகு பழைய நிலைக்கு வரும்போது மூச்சை மெதுவாக வெளியே விடவும். பிறகு இரு கால்களையும் மேல தூக்கி கொண்டு, இந்த முறையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

நவ்காசனம்

625.0.560.350.160.300.05
இந்த ஆசன முறைக்கு முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும்.

அடுத்து, கால்களை மேலே தூக்கி கொள்ளவும். இந்த நிலையில் இரு கைகளாலும் இரு கால்களையும் பிடித்து பிடித்து படகை போன்று செய்ய வேண்டும்.

மூச்சை இறுக்கமாக பிடித்து கொள்ளாமல், இலகுவாக உடலையும் மூச்சையும் வைத்து கொள்ளவும். இதனை “படகு போன்ற ஆசனம்” என்றும் சொல்லுவார்கள்.

உஸ்ட்ராசனம்

Google
முதலில் கால்கள் உள்ளே மடங்குவது போன்று முழங்காலில் உட்கார வேண்டும். அடுத்து மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ளுங்கள்.

இந்த நிலையில் உடலை நன்கு வலைத்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்கு இழுத்து வெளியே விடவும்.

இந்த நிலையில் ஒரு சில நொடிகள் இருங்கள். இவ்வாறு செய்வதால் முழு வயிற்று பகுதியும் நலம் பெறும்.

பாலாசனம்

625.0.560.350.160.300.053.8
இந்த ஆசனமானது குழந்தையின் நிலையை குறிப்பதாகும். அதாவது, இந்த பயிற்சியானது குழந்தை உட்கார்ந்திருக்கும் முறையில் இருக்கும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் நுரையீரல் வலிமை பெரும். அத்துடன் சிறுநீரக கற்கள் நீங்கவும் செய்யும்.

குழந்தை முதன்முதலில் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, நான்கு கால்களின் நிலையில் இருந்து கொண்டு கை முட்டிகளை தளர்த்தி, மார்பு பகுதியை தரையில் கை முட்டிகளுக்கு இடையே படிய வைக்கவும்.

தலையை வலது பக்கமாக திருப்பி குழந்தையை போன்று இந்நிலையில் இருக்க வேண்டும்.

இப்போது மூச்சை இழுத்து வெளியே விடவும். பிறகு இடது பக்கமாகவும் செய்ய வேண்டும்.

விபரீத காரணி முத்திரை

625.0.560.350.160.3
இந்த ஆசன முறையை செய்ய, மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து உங்கள் கால்களை உடம்போடு சேர்த்து மேலே தூக்கி கொள்ளவும்.

ஒரு சில மணித்துளிகள் இந்த நிலையிலே உங்கள் உடலை வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு பழைய நிலைக்கே சென்று விட்டு, மறுபடியும் இந்த ஆசனமுறையை செய்ய வேண்டும்.

பவன்முக்தாசனம்

625.0.560.350.160.300.0
இந்த ஆசன முறையை செய்ய, முதலில் மல்லாந்து படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, முழங்காலை வயிற்று பகுதிக்கு வருவது போன்று செய்து, இரு கைகளாலும் வலது முழங்காலை பிடித்து கொள்ளவும்.

பிறகு மூக்கால் முழங்காலை தொடும்படி செய்ய வேண்டும்.

இதே நிலையில் முடிந்த அளவு இருங்கள். அடுத்து இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

Related posts

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்…

nathan

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்

nathan

புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ஜோடியாக `ஆர்ட் தெரபி’க்கு செல்லுங்கள்!

nathan

பெற்றோர்களே தெரிஞ்சிக்கங்க…கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லக்கூடாதவைகள்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.

nathan

எது சரியான முறை? உடல் எடை குறைப்பு

nathan

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

nathan

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan