27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053. 5
ஆரோக்கிய உணவு

வெளிநாட்டினரையும் வாயடைக்க வைக்கும் பழைய சோறு… அப்படியென்ன இதுல இருக்குது

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

நீச்சத்தண்ணி என்றால், பழைய சோற்றுத் தண்ணீர், நீராகாரம் என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம்.

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

 

சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை தருகிறது.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.” என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

Related posts

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan

உங்களுக்கு தெரியுமா வெயிட் போடும் என்று ஒதுக்கிய இந்த சக்தி வாயந்த உணவு பொருள் ஒரே மாசத்துல 20 கிலோ எடையை குறைக்குமாம்!

nathan

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும்.

nathan

வீட்டில் தயாரிக்கும் தயிர் ஏன் கெட்டியாக உள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆட்டுக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பாகற்காய்னு சொன்னாலே வாய் கசக்குதா?… அப்ப இத படிங்க!

nathan

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

பீட்சாவில் சேர்க்கப்படும் பொருள் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan