31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை படிப்படியாக குறைக்கும் உணவுகள்!

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த ஓர் உணர்வை தரும். இதனால் விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

கருப்பு பீன்ஸ்

ஒரு கப் கருப்பு பீன்ஸில் 15 கிராம் நார்ச்சத்து உள்ளது. கருப்பு பீன்ஸில் உள்ள ஆந்தோசியாசின்ஸ் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிக துரிதமாக செயல்படுவதோடு, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.

 

ராஸ்பெர்ரி

1 கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்துடன் சேர்த்து ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி நிறைந்த ராஸ்பெர்ரி அளவில் சிறியதாக இருந்தாலும், ஆற்றலில் மிகப் பெரியது. இவற்றை யோகர்ட், சாலட் அல்லது அப்படியே கூடி சாப்பிடலாம்.

 

சியா விதைகள்

2 டேபிள்ஸ்பூன் சியா விதைகளில் 8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது. சியா விதையில் நார்ச்சத்துடன் கூடவே ஒமேகா கொழுப்பு அமிலமும் உள்ளதால் ஒட்டுமொத்த அழற்சியை போக்கக்கூடியது.

ப்ளாக்பெர்ரி

1 கப் ப்ளாக்பெர்ரியில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதிகமான நார்ச்சத்து கொண்டுள்ள ப்ளாக்பர்ரியில், ஆன்டிஆக்சிடன்ட், ஆன்தோசியானின் உள்ளது. இது உடலில் அழற்சி தன்மையை குறைத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

 

பட்டாணி

1/4 கப் பட்டாணியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் உடைத்த பட்டாணியில் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகமாகவே உள்ளது. குறைந்த கொழுப்புச்சத்து உள்ள பட்டாணியில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

Related posts

லஸ்ஸி… வெயிலுக்கு இதம், உடலுக்கு நலம் தரும் அமிர்தம்!

nathan

உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan

துரியன் பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

nathan

நீங்கள் உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

nathan

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்

nathan

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

nathan

உங்களுக்கு தெரியுமா முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan