27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

முதியோர் வெயில் காலத்தில் சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க

முதியோர் வெயில் காலத்தில் சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க
வெயில் காலத்தில் புற வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க, வியர்வை வழியாகத் தண்ணீர் அதிக அளவு வெளியாகும் என்பதால், அடிக்கடி சிறுநீர் வராது. எனினும், பொதுவாகப் பெரியவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையும், முதியவர்கள் ஆறு முதல் எட்டு முறையும் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம்.முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தாலும், திடீரென சிறுநீர் கழிப்பது குறைந்தாலும், சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளிவந்தாலும், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது  நல்லது. சிறுநீர் நன்றாக வெளியேற, தண்ணீர் அதிக அளவு அருந்த வேண்டும். முடிந்தவரை, காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரையில், வெயில் நேரத்தில் வெளியே தலை காட்டாதீர்கள். வைட்டமின் – டி குறைபாடு உள்ளவர்கள், காலை ஆறு முதல் எட்டு மணிக்குள், மிதமான சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிடுங்கள்.

அவசியம் வெளியில் செல்ல நேர்ந்தால், தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள். முழுக்கை சட்டை அணிந்து செல்லுங்கள். எப்போதும் கையில் 500 மி.லி அளவுகொண்ட தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தடிமனான ஆடைகள் வேண்டாம்.

மஞ்சள், வெள்ளை, ஆகாய நீலம், பச்சை என வெளிர் நிறங்களில் ஆடை அணியுங்கள். இது, சூரியனிலிருந்து வெளிபடும் புற ஊதாக் கதிர்களால், சருமம் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும். முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

பூசணிக்காய், வெள்ளரி, சுரைக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மணத்தக்காளி, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை என தினமும் ஒரு கீரை உணவில் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கொத்தமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடுங்கள்.

காபி, டீ, குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதைவிட, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை நீர்மோர் அருந்துங்கள். அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தாகத்தைத் தணிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தரும்.  ஒரே வகையான உணவையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல், தினமும் விதவிதமான நிறத்தில் இருக்கும், பல்வேறு வகையான காய்கறிகளை, உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

மன அழுத்தம் போக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சேமித்து வைத்த தாய்ப்பாலை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் 8 யோகாசனங்கள்!!!

nathan

உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!

nathan

தெரிஞ்சிக்கங்க… பூண்டு மற்றும் தேனை உட்கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் அற்புதமான பயன்கள்

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்

nathan

சித்த மருத்துவத்தில் சில முக்கிய நோய்களுக்கு மருந்துகள்

nathan

நீங்கள் சத்து மாத்திரைகளை எடுப்பவரா?ஆபத்துக்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

nathan