31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! பெரு வயிற்றைக் குறைத்து அழகான உடலமைப்பைப் பெற உதவும் கசாயம்

வயிறு பெருத்து அவதிப்படுகின்றீர்களா? கவலை வேண்டாம் இந்த கசாயத்தைக் குடித்துவாருங்கள் பெரு வயிறு காணாமல் போகும்.

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – ஒரு கைப்பிடி

வேப்பிலை – ஒரு கைப்பிடி

ஒமம் – 10 கிராம்

மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை

முதலில் பாலக் கீரை மற்றும் வேப்பிலையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பாலக் கீரை , வேப்பிலை , ஓமம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் பெரு வயிற்றை குறைக்க உதவும்.

பெரு வயிற்று பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் பெரு வயிறு குறைந்து அழகான உடலமைப்பை பெறலாம்

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

– கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan

கொண்டைக்கடலையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் ! உடல் எடையை குறைக்க

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

உருளை கிழங்கு கைமா..!செய்வது எப்படி.?!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

nathan

சத்துமாவு. ஆம்….பல தானியங்கள். பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும்…

nathan

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…நார்த்தங்காய் ரசம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

nathan

கருப்பை நீர்க்கட்டியால குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan