நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால், சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது தீங்கினை விளைவித்து விஷமாக கூட மாற வாய்ப்புள்ளது.
புரதம் அதிகமாக உள்ள உணவுகள் உண்ணும் போது அவை எளிதில் கெட்டுப்போகும் தன்மையுடையவை.
வேர்க்கடலை, பால், அசைவ உணவுகள், எண்ணெய் போன்றவை எளிதில் கெட்டுபோகும் தன்மையுடையவை. இவற்றுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போது ஆபத்து ஏற்படுகிறது.
மழை, பனிக்காலங்களில் அரிசி, பருப்பு போன்றவற்றில் அதிகளவில் பூஞ்சைகள் சேருவதால் அவை எளிதில் கெட்டுப்போகும்.
இந்த பொருள்களை வெயிலில் காயவைத்து மறுபடி உபயோகிக்கும் போது அவை அழிவது இல்லை மீண்டும் நோய்களை பரப்புகிறது.
ப்ரிட்ஜில் உள்ள உணவானது கெட்டுப்போகாது என நினைப்பது தவறு. அதில் அதிகளவில் பூஞ்சையானது பரவி நோயினை உண்டாக்குகிறது.
எக்ஸ்பயரியான பொருள்களை பயன்படுத்துவது தவறு. இதனால் புட் பாய்சன் ஏற்படுகிறது. சிப்ஸ் வகைகளை கவனித்து வாங்க வேண்டும். கெட்டு போன வாசனை வந்தால் அவற்றை உண்பது தவறு.
பிரிட்ஜில் உணவுகளை வைக்காமல் அவ்வவ்வபோது சமைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கடையில் வாங்கி கொடுக்காமல் வீட்டில் நாமே சமைத்து கொடுக்கலாம்.