28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ryrs
ஆரோக்கியம் குறிப்புகள்

முட்டி மோதியாவது வென்று காட்டுவார்கள். 5 ஆம் எண் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்காரர்கள் ஆவர். ஐந்தாம் எண்காரர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எல்லோரிடமும் பாகுபாடின்றி மிக சரளமாகப் பழகுவார்கள்.

எல்லோரையும் எல்லா செயல்களுக்கும் ஊக்குவிப்பார்கள். பேச்சு நுணுக்கங்களை தெரிந்து வைத்து இருப்பார்கள். இவர்கள் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை முட்டி மோதியாவது வென்று காட்டுவார்கள்.
ryrs

இவர்கள் மனதில் நிறைய திட்டங்களை போட்டுக் கொண்டு அதை செயல்படுத்துவதற்க்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஏதாவது விஷயம் சரியாக புரியாவிட்டால் அது புரியும் வரை சம்மந்தபட்டவரை விட மாட்டார்கள். எந்த விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைபடுவார்கள். அதற்காக அதன் ஆணி வேர் வரை சென்று பார்த்து விடுவார்கள். எதையும் சற்று ஆழமாக கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

gyjftuyryu
இவர்கள் தற்பெருமை கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லாம் தனக்கு தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உலகத்தில் உள்ள எல்லாத்தையும் தெரிந்தவர் போல சில சமயங்களில் தன்னை நினைத்து கர்வம் கொள்வார்கள். இவர்கள் அபாரமான ஞாபக சக்தி கொண்டவர்கள். இவர்கள் பேசுவதை மற்றவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றால் சட்டென்று கோபம் வரும்.

இவர்கள் பண விஷயத்தில் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தோல்வி தான் என தெரிந்தாலும் மனம் தளராமல் கடைசிவரை போராடுவார்கள். பிறர் ரசிக்கும்படி பேசுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு தங்கள் மனதில் உள்ளதை மறைக்கத் தெரியாது. எதையும் வெளிப்படையாக பேசி சில சமயம் சிக்கலில் மாட்டி கொள்வார்கள்.

rtysrty
அவசர புத்திகாரர்களாகவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை புகழ்ந்து பேசினால் போதும். எளிதில் இவர்களிடம் இருந்து காரியங்களை சாதித்து கொள்ளலாம். இவர்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் பொறுமைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

இவர்கள் தனது மனம் போன போக்கில் தான் நடந்து கொள்வார்கள். தனக்குப் பிடித்ததை தான் செய்வார்கள், யார் சொன்னாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். எந்தத் தொழிலில் இவர்கள் ஈடுபட்டாலும், அதை லாபகரமாக மாற்றி காட்டுவார்கள். இவர்களிடம் ஒரு தனித்திறமை காணப்படும். ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

நரம்பு சம்மந்தமான நோய்கள், இரத்த அழுத்தம், தூக்க மின்மை போன்ற நோய்கள் போன்றவை இவர்களுக்கு வரும் நோய்களாகும். இவர்கள் உணவு விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

Related posts

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

ஆண் குழந்தை பிரசவ வலி அறிகுறிகள்

nathan

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

உங்களிடம் இருக்கும் இந்த பழக்கம் உங்கள் திருமணத்திற்கு எதிரி என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல் சில வீட்டு வைத்தியம்… இருமல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க

nathan

தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா? நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி.!!

nathan