36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

இவ்வளவு நன்மைகளா? கொலுசு அணியும் பெண்களே…!

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் முத்து வெள்ளி போன்றவற்றில் கூட நாம் நகை அணிதல் நல்லது.

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம் காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தை நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

இப்படி பல நன்மைகளை கொண்டிருப்பதால் தான் அன்றைய கால கட்டடத்தில் இருந்தே பெண்கள் காலில் கொலுசு அணியும் பழக்கம் கொண்டிருந்தனர்.

Related posts

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற நீங்க இத செஞ்சா போதுமாம்!

nathan

எண்ணெய் உணவுகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்….!

nathan

எச்சரிக்கும் ஆய்வு..’குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்’

nathan

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

மெலிந்த உடல் பருக்க

nathan

நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?…

sangika

உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan

தெரிந்துகொள்வோமா? இனி சாப்பிட்ட பின்பு மறந்து கூட இந்த 6 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க

nathan