27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
10 15155 2
தொப்பை குறைய

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்!!

உங்கள் தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கா? என்ன தான் டயட் இருந்தும் உடற்பயிற்சி மேற்கொண்டும் உங்கள் தொப்பையை குறைக்க முடியலையா.

அதிகமான உடல் பருமன் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

உங்கள் டயட்டில் நீங்கள் செய்யும் சின்னதொரு மாற்றம் கண்டிப்பாக உங்கள் கொழுப்பை கரைக்க உதவப் போகிறது. ஆமாங்க சில மூலிகைகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் தேவையில்லாத கொழுப்பை எளிதாக கரைக்கலாம்.

ஏனெனில் இந்த மூலிகைகளில் உள்ள பாலிபினோல் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.

அப்படிபட்ட வேகமாக கொழுப்பை கரைக்க உதவும் 10 வகையான மூலிகைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புதினா புதினா அதன் இனிப்பு வாசனையால் நிறைய உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இவை நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்க முடியும்.10 15155 2

ரோஸ்மேரி ரோஸ்மேரி மூலிகையில் உள்ள லிப்பாஸ் என்ற என்ஜைம் கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்து எளிதாக உடலில் கொழுப்பு தங்காமல் காக்கிறது. இதை சாப்பிட்டால் போதும் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உங்கள் சீரண சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கற்றாழை கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. உடல் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. அழகு பராமரிப்பு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதிலும் கற்றாழை ஜெல் உதவுகிறது. எனவே தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் கொழுப்பு சத்து காணாமல் போகும்.

பார்சிலி இது ஒரு அலங்கரிக்கும் தாவரமாக இருந்தாலும் இவை பசியை கட்டுப்படுத்துகிறது. மேலும் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பை ஆற்றலாக மாற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

டான்டெலியன் உடல் எடையை குறைக்க இதை நாம் தேநீராகவோ அல்லது சாலட்டாகவோ எடுத்து கொள்ளலாம். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் அழற்சியை போக்குகிறது. இது உடல் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.10 151 1

விஷ்னு க்ரந்தி விஷ்னு க்ரந்தி நமது கல்லீரல் செயலை மேம்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. மேலும் தங்கியுள்ள கொழுப்பை குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

துளசி துளிசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. அதிகமான கார்டிசோல் அளவு கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேரச் செய்கிறது. எனவே இந்த துளிசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

Related posts

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுடைய 4 பழக்கவழக்கத்தால் அனாவசியமாக ஏற்படும் தொப்பை:

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே

nathan

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

nathan

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:

nathan

தொப்பை குறையணுமா?

nathan

தினமும் இந்த 4 உணவுடன், 2 உடற்பயிற்சியை மேற்கொண்டால்.. ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்கலாம்!

nathan

வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan