தொப்பை குறைய

இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும். சூப்பர் டிப்ஸ்…

இந்தியர்கள் எப்போதும் வாய்க்கு சுவையாகத் தான் சாப்பிட விரும்புவார்கள். இதற்காக உண்ணும் உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த மசாலா பொருட்களால் உணவுகளின் ருசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அதில் ஏராளமான மருத்துவ பண்புகளைத் தன்னுள் கொண்ட ஓர் பொருள் தான் சீரகம்.

சீரகம் எகிப்துக்கு சொந்தமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு, இந்தியா, சீனா மற்றும் மத்திய தரை நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. நமது வரலாற்றில், சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.

ஈரான் ஆய்வு ஈரானின் ஷாஹித் சதோகி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தோராயமாக 88 எடை கொண்ட அல்லது உடல் பருமனான பெண்களை 2 குழுக்களாக பிரித்தனர். 3 மாதங்களாக இந்த 2 குழுக்களுக்கும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் தரப்பட்டது மற்றும் அவர்கள் தினமும் 500-க்கும் குறைவாக கலோரிகளை எடுத்து வந்தனர்.

சீரகம் உட்கொண்ட குழுவினர் ஒரு குழுவினர் தினமும் 3 கிராம் அளவில், அதாவது 1 டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் சீரகப் பொடியை, 5 அவுன்ஸ் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். 3 மாதத்திற்கு பின், இரண்டு குழுக்களில் உள்ளோரின் எடையைப் பார்க்கும் போது, அதில் சீரகத்தை அன்றாடம் எடுத்த குழுவினர், சீரகம் உட்கொள்ளாத குழுவினரை விட 3 பவுண்ட் அதிகமாக எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்தது. ஆகவே நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சீரகத்தினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம்.

செரிமானத்திற்கு உதவும் சீரகம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கக்கூடியது. நல்ல நறுமணத்தைக் கொண்ட சீரகம், நமது வாயில் உள்ள எச்சில் சுரப்பியை சிறப்பாக செயல்படச் செய்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்ததாக, சீரகத்தில் உள்ள தைமோல், சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, அமிலங்கள், பித்த நீர், நொதிகள் போன்ற செரிமானத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யச் செய்து, உணவுகளை முற்றிலும் செரிக்கச் செய்கிறது. மேலும் சீரகம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இல் உள்ள மக்னீசியம் மற்றும் சோடியம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். வயிற்று வலி இருக்கும் போது சுடுநீரில் சீரகத்தைப் போட்டு குடித்தால், வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோயைத் தடுக்கும் மசாலாப் பொருட்களுள் ஒன்றான சீரகம், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இதனால் ஹைப்போ கிளைசீமியா வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஒருவர் சீரகத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுவிக்கும் சீரகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பண்புகள், தூக்கமின்மையை உண்டாக்கும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். எனவே உங்களுக்கு இரவு நேரத்தில் மன கஷ்டத்தினால் சரியான தூக்கம் வராமல் இருந்தால், சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் சீரகத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி, அடிக்கடி சளி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சீரகம் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளி வறட்சி அடைந்து ஏற்படும் இருமலைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவைகளாகும். முக்கியமாக இவற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கும் தொற்றுக்கள் மற்றும் டாக்ஸின்களை எதிர்த்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

டாக்ஸின்கள் வெளியேறும் யார் ஒருவர் அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்து வருகிறார்களோ, அவர்களுக்கு பருக்கள், அரிப்புக்கள் மற்றும் உடலில் டாக்ஸின் தேக்கத்தால் சந்திக்கும் இதர பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் சீரகத்தில் உள்ள க்யூமினல்டிஹைடு, தைமோல் மற்றும் பாஸ்பரஸ், உடலில் இருந்து டாக்ஸின்களை அன்றாடம் வெளியேற்ற உதவும்.

புற்றுநோயைத் தடுக்கும் சீரகம் உடலை சுத்தம் செய்வதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை அழிக்கும் பண்புகளைத் தன்னுள் கொண்டது. எனவே ஒருவர் தினமும் உணவில் சீரகத்தை சேர்த்து வந்தால், குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம். உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், அன்றாடம் தயிரில் சிறிது சீரகப் பொடியை சேர்த்து சாப்பிடுங்கள்.

அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கும் சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுக்கும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தாலே, அது இன்னும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும். ஒருவரது மூளைக்கும், உடலின் இதர உறுப்புகளுக்கும் போதுமான இரத்த ஓட்டம் கிடைத்தால், அவரது அறிவாற்றல் செயல்திறன் அதிகரிப்பதோடு, அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறு ஏற்படும் அபாயம் குறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இவர்களுக்கு மற்றவர்களை விட இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். மேலும் சீரகத்தில் உள்ள தைமோல் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். சில பெண்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். அவர்கள் தினமும் சீரகத்தை உட்கொண்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

எப்படியெல்லாம் சீரகத்தை உணவில் சேர்க்கலாம்? * சீரகத்தை பொடி செய்து சூப், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மீது தூவி சாப்பிடலாம். * பொரியல் செய்வதற்கு தாளிக்கும் போது, அத்துடன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். * கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு, அந்நீரைக் குடிக்கலாம். * தயிர் சாப்பிடும் போது, அத்துடன் சீரகப் பொடியைத் தூவி சாப்பிடலாம்.

1 obesewoman 1519970818

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button