29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
26 sonakshi
முகப் பராமரிப்பு

உங்க நெற்றி நீளமா இருக்கா?அப்போ ‘லைட்’டா குறைக்கலாமா??

நெற்றியானது மிகவும் பெரியதாக இருந்தால், அது ஒருவரின் அழகையே வித்தியாசப்படுத்திக் காட்டும். மேலும் நிறைய மக்களுக்கு நெற்றியானது மிகவும் பெரியதாக இருக்கும். அத்தகையவர்கள் அதனை மறைக்க பாங்க்ஸ் ஹேர் ஸ்டைலை பின்பற்றுவார்கள். இருப்பினும் இதை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் தான் இருக்க முடியும்.

ஆகவே தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் நெற்றியானது இன்னும் பெரியதாகி, நாளடைவில் முன்புறம் வழுக்கை ஏற்பட்டுவிடும்.

எனவே தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியானது குறைந்து, நெற்றி திடீரென்று பெரிதாக ஆரம்பித்தால், அப்போது அவ்விடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்குமாறான செயல்களில் ஈடுபட வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.26 sonakshi

சிலர் தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, அதிக பணம் செலவழிப்பார்கள். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு பின்பற்றினால், நிச்சயம் முடியின் வளர்ச்சியானது அதிகரித்து, அழகான நெற்றியைப் பெறலாம். இப்போது நெற்றில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஆயில் மசாஜ்
தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் ஆயில் மசாஜானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய் கூட முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முதன்மையானவை. அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். குறிப்பாக விளக்கெண்ணெயை நெற்றில் அதிகம் தடவ வேண்டாம். இல்லாவிட்டால், அது பருக்களை ஏற்படுத்திவிடும்.

ஹென்னா பேக் ஹென்னாலை தலைக்கு பயன்படுத்தும் போது, நெல்லிக்காய் பொடி, சீகைக்காய், பொடி, பிராமி, தயிர் மற்றும் இதர பொருட்களான கறிவேப்பிலை பொடி, செம்பருத்தி இலை, வெந்தயம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து, நெற்றியில் சொட்டையாக உள்ள இடத்திலும், தலைக்கும் ஹேர் பேக் போட வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பிராமி பிராமி இலையானது ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். அதற்கு பிராமி பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, நெற்றியில் முடி வளராத இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

சீவும் போது கவனம் தேவை போனிடைல் போடும் போதோ அல்லது கொண்டை போடும் போதோ, முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம். மேலும் எப்போதும் பின்புறம் நோக்கி தலையை சீவ வேண்டாம். இதனால் மயிர்கால்கள் வலுவிழந்து, பின் நாளடைவில் தலையின் முன்புறம் வழுக்கையானது ஏற்பட்டுவிடும். இப்படி சீவுவது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் வழுக்கையை ஏற்படுத்தும்.26 13933979

பாங்க்ஸ் ஹேர் ஸ்டைல் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கை பொருட்களை கொண்டு முடியைப் பராமரிப்பதுடன், பெரிய நெற்றியை மறையும் வரை, பாங்க்ஸ் ஸ்டைலை பின்பற்றுவது நல்லது.

இரும்புச்சத்துள்ள உணவுகள் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பச்சை இலை காய்கறிகள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Related posts

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் தோலை அழகுக்காக இப்படி யூஸ் பண்ணலாமா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையா மாற்ற இத செஞ்சா போதுமாம்…!

nathan

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

முகம் பொலிவடைய வேண்டுமா?

nathan

பேரழகியா மாறணுமா?…அப்ப இத மட்டும் வீட்லயே முயன்று பாருங்கள்…

nathan

கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan