32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை!

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், பேஸ்பேக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை
மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று… முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.

Related posts

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!

nathan

நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி

nathan

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

nathan

இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் வேகமாக வெள்ளையாகலாம்!

nathan

நீங்க அழகாக பொலிவா இருக்க இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை போக்க சில அசத்தலான வழிகள்!!!

nathan