35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
155636359f7209cb86be9d27a52ac40be20e933973081928598574000473
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்…!!

மனித உடலின் மொத்த ஆரோக்கியம் நம் வயிற்றுக்குள் தான் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது. நம் வயிறு கெட்டுப் போயிருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம்.

வாய் துர்நாற்றம் வீசும். பசி இருக்காது. வயிற்றில் அதிகமான நச்சுத்தன்மை தங்கி சின்ன, சின்ன பூச்சிகள் உருவாகும். இதனால் நாளடைவில் வயிறு உப்புசம், தொப்பை முதலியவை ஏற்படும். இதை எல்லாத்தையுமே சரி செய்ய சிம்பிளான இயற்கை வைத்திய முறைகள் உள்ளன.

சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும்.

155636359f7209cb86be9d27a52ac40be20e933973081928598574000473

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள்.

இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். மேலும் இந்த கிருமிகளை வராமலும் தடுக்கும். இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எழுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது.

இந்த ட்ரிங்கை வாரம் ஒருமுறை எடுத்துக்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதற்கு முன்பு சாதாரண பச்சைத்தண்ணீர் அரை கிளாஸ் குடித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதைக் குடிக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடித்தாலே நம் வயிறு க்ளீன் ஆக ஆரம்பிக்கும்.

இந்த தண்ணீரைக் குடித்த 15 நிமிடத்திலேயே நம் வயிறு சுத்தமாகிடும். இதை 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கால் கிளாஸ் அளவுக்கு கொடுக்கலாம்.

Related posts

நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்…

nathan

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

nathan

இளமையுடன் இருக்க இந்தாங்க ஆலோசனை!

nathan

பெண்களுக்கு அருமையான டிப்ஸ்!! மாதவிடாய்கோளாறுகளால் பாதிப்பு

nathan

மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை

nathan

உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…மன அழுத்தம் ஏற்பட இவை தான் காரணங்கள்.!

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய் எப்படி பயன்படுத்தலாம்.?

nathan