25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
60.90 1
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…ஆண்களுக்கும் மாதவிலக்கு இருக்கிறது…

பெண்களின் மார்பகங்களில் மட்டும் தான் பால் சுரக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை நாம் நினைவில் கொள்வதே இல்லை. ஆண்களின் மார்புப் பகுதியிலும் பால் சுரக்க வைக்க முடியும்.

ஆனால் குழந்தை பசியாறும் அளவுக்கு சுரக்கவோ குழந்தைக்கு பாலூட்டவோ முடியாது. அது ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பெண்கள் மாதவிலக்கால் படும் அவதி அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று கூறுவார்கள். ஆனால் ஆண்களுக்கும் மாதவிலக்கு பருவம் உண்டு என்றால் நம்புவீர்களா?

ஆனால் அதுதான் உண்மை. மாதத்தின் சில நாட்களில் இந்த அறிகுறிகள் இருக்கும். அந்த சமயங்களில் பெண்களைப் போல அவர்களுக்கு ரத்தப்போக்கு உண்டாவதில்லை. ஆனால், உலகில் 26 சதவீதம் பேர் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.

மாதத்தின் குறிப்பிட்ட அந்த நாட்களில், கொடூரமான பசி, அதீத கோபம், சோர்வு ஆகியவை உண்டாகும். ஏன் சில சமயங்களில் அழுகை கூட வருமாம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் சுழற்சி உண்டு.

ஆண்களுடைய பாதங்கள் பெண்களின் பாதங்களைவிட அகலமாக இருக்கும். ஆண் பெண் இருவரும் ஒரே உயரமுடையவராக இருந்தாலும் கூட, ஆணின் பாதத்தைவிட பெண்ணின் பாதம் அகலம் குறைவாகத்தான் இருக்குமாம்.

ஆண்களின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் முடி வளர்வதைத் தான் நாம் தாடி என்கிறோம். இந்த தாடி 5000 முதல் 25000 முடி வரை வளர்ந்திருக்குமாம்.

ஆண்களுடைய தாடி வருடத்துக்கு 6 இன்ச் வரையிலும் வளரக்கூடியது.

ஆண்கள் தங்களுடைய வாழ்நாள் முழுக்க 27 அடி நீளம் வரையிருக்கும் முடியை ஷேவ் செய்கிறார்களாம்.

ஆண்கள் ஒரு வருடத்துக்கு ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் மொத்தம் 60 மணி நேரம். வாழ்நாளில் 5 மாத காலங்கள் ஷேவ் செய்ய மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.

Related posts

உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற உதவும் பொருட்கள்!!!

nathan

மரு நீக்கும் ointment

nathan

உங்களுக்கு தெரியுமா குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

nathan

எது காயகல்பம்? நலம் நல்லது

nathan

மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள கலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

nathan

அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்! மருத்துவர் கு.சிவராமன்

nathan

விந்தணு உள்ளே சென்றதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது

nathan

ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்

nathan