31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..!

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது.

இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.

Related posts

பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் போது ஏற்படும் மாற்றங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி வைத்தியம்!

nathan

இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!

nathan

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்!

nathan

தெரிந்துகொள்வோமா? நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடை குறைப்பில் செய்யும் தவறுகள்

nathan

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?

nathan