ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. அறிகுறிகள் என்ன..?

புற்றுநோய் என்றாலே உயிரணுகளில் ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோயும் உள்ளடங்கும் இதன் மூலம் உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது.

இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வரமுடியும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது.

அறிகுறிகள்:

அசாதரண ரத்தப்போக்கு: கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும் உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்பு நிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை: சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும் எனவும் தெரிகிறது.

பொதுவாக சில பெண்கள் உடலுறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும் கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். எனவே இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பழங்கள் சாப்பிடுவது முக்கியம்.

ஆவியில் வேகவத்த உணவுகள் சாப்பிடலாம். அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில் முட்டைக்கோஸ் காலிபிளவர் முளைகட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றிலிருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

ஆப்பிள் எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றை எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் பாதாம் பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேகவைத்து அல்லது குழம்பு செய்தும் சாப்பிடலாம்.

Related posts

எவ்ளோ பெரிய தொப்பையையும் மாயமாக்க, கொள்ளை இப்படி பயன்படுத்துங்கள்.!

nathan

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்!

nathan

நகம் கடிப்பதால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, பெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் பாதிப்பு வருமா?

nathan

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…முகக்கவசம் அணியும் போது இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

nathan