26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
yutiu
ஆரோக்கியம் குறிப்புகள்

கவனமாக இருங்கள்.! செல்போன் கேம்களின் மோகத்தால் குழந்தைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற ஆரோக்கியமான விளையாட்டுகளை செல்போன், கணினியில் மட்டுமே இன்றைய குழந்தைகள் விளையாடுகின்றனர்.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நான்கு சுவற்றுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால், ஓடி விளையாடக்கூடிய குழந்தைகளை எந்த தெருக்களிலும் பார்க்க முடிவதில்லை.

செல்போன் கேம்களின் மோகத்தால் குழந்தைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வீடியோ கேம் விளையாட்டுக்களால் ஏற்படக்கூடியவை :

இருட்டில் அமர்ந்து, ஒளி திரையை பார்த்துக்கொண்டு கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறனில் குறை ஏற்படும்.

திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களை தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

வீடியோ கேம் விளையாடிக்கொண்டு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது.

வீடியோ கேம் விளையாடுவதால் படிப்பில் கவனக்குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது.
yutiu
வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மனநலம் பாதிக்கப்படுவது தான்.

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு ஒருவரை தள்ளிவிட்டு மேலே வர வேண்டிய ஆர்வம் ஏற்படும். இது அவர்கள் வாழ்க்கையில் தீயதை போதிக்கும் ஒரு பழக்கமாகும்.

தவிர்க்கும் வழிமுறைகள் :

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுக்களை தேர்வு செய்து கொடுங்கள். அந்த விளையாட்டில் தவறாக எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

அவர்களுடன் நீங்களும் விளையாடுங்கள். இதனால் அந்த விளையாட்டில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள கூடும்.

உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பாடுவது, ஆடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.

உங்கள் குழந்தைகள் விளையாட ஆசைப்பட்டால் அவர்களுக்கு ஒரு சில விதியை நீங்களே விதித்து அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட்போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்கு படிக்க வேண்டியவற்றை படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்திற்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஒவ்வொரு ராசிக்கும் ஆரோக்கியமாக வாழ டிப்ஸ்!

nathan

நீங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

வருங்கால தலைவர்களின் ஆரோக்கியம் எப்போதும் எமக்கு முக்கியம்… கட்டாயம் இதை படியுங்கள்…

sangika

நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!

nathan

கிட்னி பிரச்சினை தடுக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?

nathan

மருதாணி முகம் மற்றும் சருமப்பொலிவுகள் மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும்

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

பாத்ரூம் கற்களின் கறையை நீக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan