32.5 C
Chennai
Saturday, Jul 5, 2025
53717578d6f893b1b07bb0a7d0be7288d3aaabdd2040420992
அசைவ வகைகள்

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

நாட்டுக்கோழி எந்த அளவுக்குச் சுவையானதோ அதே அளவுக்கு அதை சுவைபடச் சமைப்பது கடினமானது.
அதன் தோலை உரித்துவிட்டாலே,அதன் சுவை பாதி குறைந்து விடும்.
அதன் உடலில் இருக்கும் சிறகுகள் மற்றும்,முடிகளை அகற்றிவிட்டு,நெருப்பில் வாட்டி மஞ்சள் தடவி சமைத்தால் தான் நல்ல சுவை கிடைக்கும்.

அதற்கான மசாலாக்களும் தனித்துவமானவை.அத்தகைய நாட்டுக் கோழியை சுலபமாக வறுத்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்.அதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது..

பொதுவாக நாட்டுக்கோழி என்று கறிக்கடைகளில் விற்கப்படும் நாட்டுக்கோழிகள் பெரும்பாலும் பண்ணைகளில் வளர்க்கப்படுபவைதான்.ஒரிஜினல் நாட்டுக்கோழி என்றால் அதன் மூக்கு ரொம்ப சின்னதாக இருக்கும்.அப்படி இல்லாமல் மூக்கு வெட்டப்பட்டிருந்தாலோ,நீளமாக இருந்தாலோ அது பண்ணைக் கோழிதான் சந்தேகமே இல்லாமல்.அதனால் வாங்கும்போது கவனித்து வாங்குங்கள்.

53717578d6f893b1b07bb0a7d0be7288d3aaabdd2040420992

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்யப்பட்ட நாட்டுக்கோழி இறைச்சி 1 கிலோ
சின்ன வெங்காயம் ½ கிலோ
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
மஞ்சள்
உப்பு
நல்லெண்ணெய் 150 மில்லி

இவற்றை வறுத்துப் பொடியுங்கள்

காய்ந்த மிள்காய் 20
மிளகு 3 ஸ்பூன்

தாளிக்க

பட்டை
கிராம்பு
சோம்பு
கறிவேப்பிலை

செய்முறை

குக்கரை அடுப்பில் வைத்து,சூடானதும் எண்ணெய் விடுங்கள். அதில் வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது,தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்குங்கள்.அதன் பிறகு உப்பு,மஞ்சள் தூள்,கோழிக்கறி சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு 1 டம்ளர் நீர் விட்டு குக்கர் மூடியைப் போட்டு 5 விசில் வந்ததும் குக்கரை ஆஃப் செய்யுங்கள்.

குக்கரின் ஆவி அடங்கியதும், இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளியுங்கள் . அதில் குக்கரில் உள்ள கறியை எடுத்துக் கொட்டி அதில் உள்ள நீர் வற்றும் வரை கிளறிவிடுங்கள்.நீர் வற்றியதும், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும்,காய்ந்த மிளகாய், மிளகுத் தூளை தூவி சற்று நேரம் சுருள வதக்கி இறக்குங்கள்..அவ்வளவுதான்

Related posts

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

nathan

மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி

nathan

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan