31.1 C
Chennai
Monday, May 20, 2024
a4753634 6f9c 4b30 b417 d3b8134299cf S secvpf
அசைவ வகைகள்

நெத்திலி மீன் அவியல்

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் – கால் கிலோ
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
மாங்காய் – சிறியது 1
உப்பு – தேவைக்கு
கருவேப்பிலை – 2 இணுக்கு.

அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை:

• சின்ன வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• நெத்திலி மீனின் தலை மற்றும் வயிற்றை சுத்தம் செய்து முள்ளை உருவி நான்கு முறை தண்ணீர் வைத்து அலசி வடித்து வைக்கவும்.

• மாங்காயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

• மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.

• மண் சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

• நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

• அடுத்து அதில் மாங்காய் சேர்க்கவும். மாங்காய் சேர்த்த சிறிது நேரத்தில் நெத்திலி மீன் சேர்க்கவும்.

• சிறிது உப்பு அளவாய் சேர்க்கவும். மீன் உடையாதவாறு பிரட்டி விடவும். மீனிலேயே தண்ணீர் ஊறும். குலுக்கி விடவும்.

• அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பக்குவமாக பிரட்டி விடவும். கருவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.

• சிறிது மூடி வைக்கவும். பின்பு எடுத்து சூடாக பரிமாறவும்.

• சுவையான நெத்திலி மீன் அவியல் ரெடி.

• இது சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாற அசத்தலாக இருக்கும்.

a4753634 6f9c 4b30 b417 d3b8134299cf S secvpf

Related posts

மட்டன் சுக்கா

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

முட்டை குருமா

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

மத்தி மீன் வறுவல்

nathan

மட்டன் பிரியாணி

nathan

கிராமத்து மீன் குழம்பு

nathan

மீன் குருமா

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan