தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம்.
மேலும் இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகிய பதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கணைய புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எரியூட்டப்பட்ட உணவுகள்
புகை ஊட்டப்பட்ட உணவுகள் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஐட்ரோ கார்பன்களை உற்பத்தி செய்கின்றது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
எரியூட்டப்பட்ட உணவுகளை அதிக வெப்பத்தில் சமைக்கப்படுவதால், அதில் உள்ள ஹெட்டிரோசைக்ளிக் அமின்கள் எனும் வேதிப்பொருள் குடல் மற்றும் கணைய புற்றுநோயை உண்டாக்கும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள்
ரசாயனங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், மீன்கள் மற்றும் கோழி, வாத்து போன்ற உணவுகள் கட்டிகள் வரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி, உருளைக்கிழங்கு, சோயா, சால்மன் மீன்கள் போன்றவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இனிப்பு பானங்கள்
இனிப்பு பானங்களாகிய சோடா போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் நிறமூட்டி பதனப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய இனிப்பு பானங்களை வாரத்திற்கு 2 முறைக்கு மேல் குடித்தால், அவர்களுக்கு 87% செரிமான மண்டலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பூச்சிக்கொல்லி உணவுகள்
இயற்கையாக உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர், இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள நச்சுகள் கேன்சரை உருவாக்குகின்றன.
பொரித்த உணவுகள்
எண்ணெய்யில் பொரித்த உணவுகளான சிப்ஸ்களில் அகிரிலமிட் எனும் ரசாயனம் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்குகிறது.
அதுவும் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் ஆல்டிஹைட் எனும் நச்சு உள்ளது. இதுவும் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.