மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகளுக்கு கால் வலிக்கான காரணங்கள்!

[ad_1]

சர்க்கரை நோயாளிகளில் பலர் கால் வலி, கால் மதமதப்பு, கால் கடுப்பு, உளைச்சல் அவதிப்படுகின்றனர்.அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது கால் வலிக்கான காரணங்கள் பொதுவாக என்ன என்பதை அறிந்த பின்னரே சிகிச்சை மேற்கொள்ளுவதே சிறந்தது.
பொதுவாக அவ்வப்போது வலி வரும்போது வலி மாத்திரைகளை சாப்பிடுவதும் விட்டுவிடுவதும் பிறகு வலி வரும்போதெல்லாம் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சரியல்ல.

வலிக்கான காரணங்கள்:

கால் வலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள்:
நீர்ச்சத்துக் குறைவு,

உப்பு குறைவு

விட்டமின் டி3 குறைவு

ஊட்டச் சத்துக்குறைவு

பொருத்தமற்ற காலணிகள்

யூரிக் அமிலம் அதிகமாதல்

தசைகள்: 

பொதுவாக வலியானது தசைகளின் பலமின்மை மற்றும் தசை நார் ஆகியவற்றின் செயல்பாடுகளாலேயே ஆரம்பிக்கிறது.

1.தசைகளின் பலம் குறைவது

2.தசை நார் இறுக்கம், பிடிப்பு

3.தசைநார்களின் சுருங்கி விரியும் தன்மை

தசைகளுக்கு சரியான உடற்பயிற்சியின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். 70% வலியானது தசைநார் பிரச்சினைகளாலேயே வருகின்றது.

எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினைகள்:

எலும்புகளே நம்முடைய உடல் எடையைத் தாங்குகின்றன. எலும்புகளில் சத்துக் குறைவு ஏற்படுவதால் கால் வலி உண்டாகிறது.

இரத்த ஓட்டக் குறைவால் ஏற்படும் வலி:

கால் தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதாலும் கால் வலி உண்டாகிறது.

நரம்பு பாதிப்புகளால் ஏற்படும் வலி:

வலி, மதமதப்பு, எரிச்சல், காலின் சில பகுதிகளில் உணர்வின்மை, நடக்க இயலாமை ஆகியவை நரம்பு பாதிப்புகளால் உண்டாகின்றன.

கீழே கொடுத்துள்ளவை உங்களுக்கு இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம்.

1.கால்,கைகளில் தசை இறுக்கம் மற்றும் அசைப்பதில் சிரம்ம்.

2.விரல்கள் மடக்கும்போது மடக்கவோ நீட்டவோ முடியாமல் லாக் ஆகி விடுதல்.

3.தோள்பட்டை அசைவுகள் குறைவு, கையை மேலே தூக்க இயலாமை.

4.கால் கைகளில் மதமதப்பு, ஊசியால் குத்துவது போன்ற உணர்வு

5.தசை வீக்கம், தசை வலி.

 

Related posts

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை இப்போது சாத்தியம்!

nathan

பெண்களை தீவிரமாக தாக்கும் நரம்பியல் நோய்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் அடிக்கடி மலம் வெளியேறுவது சாதாரணமானதுதானா?

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

nathan

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan

உங்களுக்கு தெரியுமா சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்….!

nathan