மக்காச்சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது.
வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. வாய் நாற்றத்தைப் போக்கக் கூடியது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது.
மக்காச்சோளத்தில் இனிப்பு இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
மக்காச்சோள மாவில் கஞ்சி வைத்தும் பருகலாம்.
வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.
மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம்.
சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.
மக்காச்சோளத்தில் மாவுசத்து அதிகம் உள்ளது.
குழந்தைகளுக்கு உடல் புத்துணர்வு கிடைக்க மக்காச்சோள சூப் கொடுக்கலாம்.
உடலில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு உண்டு.
இரத்தத்தில் உப்பின் அளவைக் குறைக்கும்.