32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுக்க என்ன செய்யலாம்?

* காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

* பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.

* நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

* அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்… அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.

* சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.

* தினமும் உணவில் 2 டீஸ்பூன் ‘கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

* டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.

* தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.

* எப்போதும் உணவை மென்று சாப்பிடவும்.

* சோடா கலந்த குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும். வாயுத் தொல்லை அதிகமானால் இடுப்பு எடையும் அதிகமாகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா…?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்பிற்கு எது சிறந்தது?

nathan

பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

nathan

சில்லி பேபி கார்ன்

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

பற்களை வெண்மையாக்கும் புதினா

nathan

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

nathan

இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா?…

nathan

பெண்களே கர்ப்பகாலத்தில் தோன்றும் இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம்

nathan