36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

ருசியான சத்தான வாழைப்பழ தோசை!

குழந்தைகள் நிறைய வீடுகளில் வாழைப்பழங்களை சாப்பிட மாட்டார்கள். அதிலும் நாம் அதிக சத்து தரும் என்று நினைக்கிற ரஸ்தாலி, நேந்திரம் பழங்களை எல்லாம் கிட்டவே வரச் செய்யாமல் ஒதுக்கி தள்ளுவார்கள். அது மாதிரியான குழந்தைகளுக்கு இந்த தோசை செய்து கொடுங்க!

தேவையான பொருட்கள்
தோசை மாவு -1கப்
வாழைப்பழம் -1
நெய் -1டீஸ்பூன்
சர்க்கரை -1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வாழைப்பழத்தின் தோலை உரித்து விட்டு, வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்

தோசைக்கல் சூடான உடன் தோசை ஊற்ற வேண்டும். உடனடியாக வாழைப்பழத் துண்டுகளை இடைவெளி இல்லாமல் தோசை மீது வைத்து லேசாக அழுத்தி விட வேண்டும். நெய்யை தோசையை சுற்றி விட வேண்டும். தோசை ஒரு புறம் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும். தோசை சூடாக இருக்கும் போதே பொடித்த நாட்டுச் சர்க்கரையை மேலே தூவ வேண்டும். இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

கேரட் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா….!

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

சூப்பரான முருங்கைக்கீரை சாம்பார்

nathan

உங்க ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்? இத படிங்க!

nathan

இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மருத்துவ குணம்மிக்க பப்பாளி – தெரிஞ்சிக்கங்க…

nathan

சேப்பங்கிழங்கில் உள்ள மருத்துவ பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா பீநட் பட்டரின் ஆரோகிய நன்மைகள்!

nathan

இலவங்கப்பட்டையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan