dghgh
ஆரோக்கியம் குறிப்புகள்

இத படிங்க அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மதுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன. வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள்.

அல்சருக்கான காரணங்கள்:
dghgh
அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.

நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும். மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.

புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related posts

காய்ச்சல் பற்றி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்..அச்சம் வேண்டாம்…அலட்சியமும் வேண்டாம்…

nathan

சிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா? கூடாதா?

nathan

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

இயற்கை அள்ளிக்கொடுத்திருக்கும் வயாகரா மாத்திரை…..

nathan

நல்ல பலன் தரும் தினமும் இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!! சைனஸ், ஆஸ்துமா, மூக்கடைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு…

nathan

உங்களுக்கு தெரியுமா? நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

பிரசவத்திற்கு பிறகு தளர்வான தொங்கும் சதைகளா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ரொம்ப ஆபத்து??சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்!

nathan