10088359300f2b0ff59a1cdffbd395f2152e4018 1583632325
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..!

பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.

10088359300f2b0ff59a1cdffbd395f2152e4018 1583632325

முள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது.

பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

கேரட்: காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

இஞ்சி: இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும். உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.

Related posts

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…

sangika

karuveppilai benefits in tamil – கருவேப்பிலை பயன்கள்

nathan

dark lips Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

nathan

வருண் அக்ஷராவுக்கு திடீர் திருமணம்?பரவும் புகைப்படம்!

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் எண்ணிலடங்காத நன்மைகள்

nathan

யாருக்கும் தெரியாமல் காதலியை மறைத்து வைத்து 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இளைஞன்

nathan

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்க,

nathan