tjt
ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

நம் முன்னோர்கள் வலிமையான நோயெதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாட்கள் எப்படி உயிர் வாழ்ந்தனர் என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணமே அவர்களது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான்.

மேலும் நம் தாத்தா, பாட்டிமார்கள் தங்களுக்கு வரும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போக்க பலவண்ண மாத்திரைகளைப் பயன்படுத்தாமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைத் தான் அதிகம் பயன்படுத்தினர்.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் அந்த பொருட்களை நீரில் ஊற வைத்து உண்பதால், அதன் சக்தி இரட்டிப்பாகி நன்மைகள் அதிகம் கிடைக்குமாம்.

இக்கட்டுரையில் அப்படிப்பட்ட சில பொருட்களைக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை நீரில் ஊற வைத்து, நீருடன் அப்பொருளை உட்கொண்டு வாருங்கள். இதனால் நீண்ட நாட்கள் நம் முன்னோர்கள் போன்று ஃபிட்டாக இருக்கலாம்.
tjt
வெந்தயம்

சமையலில் பயன்படுத்தும் கசப்புத்தன்மை கொண்ட பொருள் தான் வெந்தயம். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. அத்தகைய வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை சாப்பிட்டால், உடல் எடை குறைவதுடன், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் மற்றும் செரிமானம் சிறப்பாக நடக்கும்.

துளசி

புனிதமான செடியாக கருதப்படும் துளசியில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. துளசியில் ஆன்டி-பயாடிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுப்பதோடு, சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. பலர் தலை வலி, பல் வலி மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றில் இருந்து விடுபட துளசி இலைகளை சாப்பிடுவர். துளசி இலைகளை நீரில் ஊற வைத்து, அந்த நீரை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். அதுமட்டுமின்றி, துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

பட்டை

பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும். பட்டை நீரை ஒருவர் குடித்து வந்தால், அது செரிமான பாதையில் கார்போஹைட்ரேட்டுக்கள் உடைக்கப்படுவதைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பட்டையின் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், பட்டையை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடியுங்கள்.

மல்லி

இந்திய சமையலில் நல்ல மணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் மல்லி. மல்லி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படும். மல்லி நீரை குடித்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் இந்த நீர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் மல்லி நீரில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளதால், இது செரிமானத்தை எளிமையாக நடைப்பெறச் செய்யும்.

திரிபலா

திரிபலா ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருந்துப் பொருளாகும். இது மூன்று உலர்ந்த பழங்களின் கலவையாகும். பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, திரிபலா ஒரு பாலிஹெர்பல் மருந்தாக கருதப்படுகிறது. திரிபலா நீர் வாழ்நாளை நீட்டிக்க உதவுவதோடு, தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனையைக் குணப்படுத்த உதவும். மேலும் திரிபலா நீரை உடல் பருமனுடன் இருப்பவர்கள் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.

Related posts

கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்!..

nathan

உங்க குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இனியும் செய்யாதீர்கள்! திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு..

nathan

very early signs of pregnancy 1 week in tamil – கர்ப்பத்தின் மிக ஆரம்ப அறிகுறிகள்

nathan

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை -தெரிந்துகொள்வோமா?

nathan

மூட்டைப் பூச்சிகளை விரட்ட அட்டகாசமான சில வழிகள்!!!

nathan

அதிகரித்துவரும் இந்த உடல்பருமன் சாதாரண விஷயம் கிடையாது. இந்த சமூகம் இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில்

nathan

ஆயுளை காக்கும் பற்கள்

nathan

அபார்சன் ஏற்படமால் தவிர்ப்பது எப்படி?.!!

nathan