சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார்மோனானது அண்ட விடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது.
போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ இந்த தாமதம் ஏற்படும். உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாமல் இருந்தாலும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆகியும் மாதவிடாய் சுழற்சி ஏற்படாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் போதிய சத்துக்கள் இல்லாமல் இருப்பதே இந்த பிரச்சனைகள் ஏற்பட காரணமாகும். இதற்கு நாம் சத்தான ஆரோக்கியமானவற்றை உண்டாலே போதுமானதாகும்.