27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1470792057f1c2b6826c516d53d26b6ed079f1f39 592887509
சூப் வகைகள்

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ??

தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். ஆட்டுக்காலை தீயில் போட்டு சுட்டெடுத்து, பின் அதனை சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விட வேண்டும். பின் கடாயில் எண்ணெய்யை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி பின், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அவை சிறிதளவு வெந்ததும் வேகவைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்க வேண்டும்.

1470792057f1c2b6826c516d53d26b6ed079f1f39 592887509

தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

Related posts

நாட்டுக்கோழி ரசம்

nathan

ப்ராக்கோலி சூப்

nathan

நூல்கோல் சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

பசலைக்கீரை சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan