கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை உள்ளவர்கள், வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே காலை வேளையில் ஓட்ஸை உணவாக எடுத்து வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால், தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள்.
ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்று இருக்கும் ப்ராக்கோலியை இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடலானது எளிதில் இரும்புச்சத்தை உறிஞ்சும்.
பட்டாணி
ஊட்டச்சத்துக்களின் கிடங்காக விளங்கும் பட்டாணியும், இரத்த சோகையைப் போக்க உதவும். எனவே பச்சை பட்டாணி வாங்கி, அதனை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.
பசலைக் கீரை
பசலைக்கீரையில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி இருப்பதால், இந்த கீரையை உட்கொண்டால், இரும்புச்சத்தை உடலானது விரைவில் உறிஞ்சும்.
பரங்கிக்காய் விதை
பரங்கிக்காய் விதையை வறுத்து, அதனை உண்ணும் உணவில் தூவி, சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.