31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்மை குறைவு ஏற்படுமா?கட்டாயம் இதை படியுங்கள்

தற்போதைய வாழ்கை முறையில் உடல் எடை அதிகமாக இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக குறைந்த விந்தணுக்களின் அளவையும், குறைந்த செயல் திறன் கொண்ட விந்தணுக்களையும் பெற்றிருக்கின்றனர் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

அதிக உடல் எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களுக்கு பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு வலிமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றின் தரம் மிகக்குறைவாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் எடை அதிகரிக்கும்போது விந்தணுக்களின் திறன் குறையும். அதே போல் தான் உடல் எடையை குறைக்கும் போது விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக உண்ணுதல், ஆல்கஹால் பருகுதல், உடற்பயிற்சியின்மை ஆகியவை உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது.

இதனால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஆகியவை ஏற்படும். எனவே வெளியில்(கடையில்) சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது மிக சிறந்தது.

Related posts

பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்! இதோ உங்களுக்காக!

nathan

உங்களுக்கு வாய் துர்நாற்றத்தால் கவலையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தவறான உணவுக் கட்டுபாடு உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும்!!!

nathan

மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்

nathan

மகப்பேறு மருத்துவர் செக்கப்பில் என்ன செய்வார்?

nathan

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan

ஆண்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள்! தெரிந்துக்கொள்ளலாம்…

nathan

பெண்களின் பார்வை பலவிதம்

nathan