மருத்துவ குறிப்பு

உங்களுக்கு வாய் துர்நாற்றத்தால் கவலையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இன்று பலரும் தர்ம சங்கடத்துக்குள்ளாகும் ஒரு விசயமாக வாய் துர்நாற்றம் இருக்கின்றது.

வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

இது நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம். அல்லது மருந்து பயன்பாடு , ஈறு பிரச்னை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இதுபோன்ற பிரச்னையிலிருந்து விடுபட என்னென்ன செய்யலாம் என பார்ப்போம்.

  • ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்டவுடன் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். அல்லது சோம்பு டீயும் பருகலாம். அதனால் தான் ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பு கொடுக்கிறார்கள்.
  • வெந்தயம் சேர்த்து தயார் செய்த டீயை பருகுவதால் வாய் துர்நாற்றம் உடனடியாக கட்டுப்படும். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து , பின் வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.
  • உங்கள் தினசரி உணவிற்கு பிறகு 2 துண்டு கிராம்பு உட்கொள்வதால் வாயில் வீசும் துர்நாற்றம் முற்றிலும் ஒழியும். கிராம்பு போட்டு தயார் செய்யப்பட்ட டீயும் நல்ல பலனை தரும். அதோடு பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியும் போய்விடும்.300.053.800.668.160.90 1
  • எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை , வாயில் கிருமிகள் வளர்வதை அழிக்கிறது. ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து, அந்த நீரால் வாயை கொப்பளித்து வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் இரவு தூங்கும்முன்னும் காலையில் பல் துலக்கிய பின்னும் இதை செய்யலாம்.
  • தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொப்பளித்து வருவதால் விரைவில் வாய் துர்நாற்றம் மறையும். ஏனெனில் இதில் இருக்கும் சமச்சீரான pH அளவால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
  • ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்கவும்.
  • ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து . அதனை பயன்படுத்தி அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.
  • சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்படாத சுயிங்கம்மை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். இதனால் ஆரோக்கியமான உமிழ்நீர் வாயில் சுரக்கும். குறிப்பாக புதினா சேர்த்து தயாரிக்கப்பட்ட சுயிங் கம்மை மெல்லலாம்.
  • கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மெல்லலாம். ஏனெனில் கொத்தமல்லி இலையில் இருக்கும் பச்சையம் (க்ளோரோபில்கள்) மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது.
  • வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் கொப்பளிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button