36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

உபயோகமான சில சமையலறை டிப்ஸ் குடும்பத்தலைவிகளுக்கு…!

கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம். மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச் என ஆகும்.

மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

இது ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது!

sangika

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

சர்வாங்காசனம்

nathan

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

nathan

வெளியே செல்லும் முன் செய்யக்கூடிய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம் வாங்க!…

sangika

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்! தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம் அலசுவோம்… வாருங்கள்…..

nathan

கல் நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

nathan