30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
Eating While Pregnant
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு முறைகள்..!

கர்ப்ப காலத்தின்போது பெண்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய ஊட்டச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பிரசவத்திலும் சிக்கல் ஏற்படும்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு புரதம் மற்றும் கொழுப்பு அவசியமாகிறது. இறைச்சி, முட்டை, பால், கொட்டை வகைகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

மீன் வகைகளில் புரதமும், கால்சியமும் அதிகம் கலந்திருக்கும். அதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும்கண்களுக்கு நலம் சேர்ப்பதோடு, குழந்தைக்கு தேவையான புரதத்தையும் வழங்குகிறது.

தானிய வவகைகள் மர்றும் சோயா பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றிலும் புரதம் நிரம்பியிருக்கிறது. கீரைவகைகள், பச்சை காய்கறிகள், ப்ராக்கோலி போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.Eating While Pregnant

விட்டமின் கே, சி, ஏ, கால்சியம், பொட்டாசியம் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அவை கொண்டிருக்கின்றன. இரும்பு சத்தும் மிகுந்தவை. தாய், சேய் இருவருக்கும் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு துணைபுரிகிறது.

முழு தானியங்களில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். மைதா மற்றும் மற்ற மாவு வகைகளுக்கு பதிலாக ராகி, சோளமாவை பயன்படுத்துவது நல்லது.

கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கல்சியம் அவசியமானது. குறிப்பாக கர்ப்பிணியின் எலும்புகள் மற்றும் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு கல்சியம் பங்களிப்பு இன்றியமையாதது.

Related posts

புளி அல்ல… மாணிக்கம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பைக் கரைக்கும் கத்தரிக்காய்…!

nathan

நீங்க வாங்கும் முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் என்ன நிறத்தில் இருக்கனும் தெரியுமா?

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் நன்மைகள்

nathan

அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட…

sangika

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பரான நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

nathan

சீனி பணியாரம்

nathan

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan